சுடச்சுட

  

  ஏலகிரிக்கு சுற்றுலா வந்திருந்தவர்களை விஷ வண்டு கடித்ததில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
  கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (45). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஏலகிரி மலைக்கு  சுற்றுலா வந்திருந்தார்.
  அங்கு ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். பின்னர் நிலாவூரில் உள்ள பூங்காவில் அமர்ந்து வியாழக்கிழமை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பூங்காவில் ஒரு மரத்தில் இருந்த விஷ வண்டுகள் கோபிநாத் (45), அவரது மனைவி யமுனா (30), உறவினர்கள் சாமுண்டீஸ்வரி (40), கயல்விழி (35), பிரபுதேவா (24), வேன் ஓட்டுநர் பரஞ்சோதி (42) ஆகிய ஆறு பேரை சரமாரியாக கடித்துள்ளன.
  வலியின் வேதனையில் கூச்சலிட்ட அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஏலகிரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
  அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று ஊர்
  திரும்பினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai