சுடச்சுட

  

  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், அறிவியல் ஒளி இதழ் நிறுவனத்தினருடன் இணைந்து தமிழகம் முழுவதும் நவம்பர் 13-ஆம் தேதி அறிவியல் திறனறித் தேர்வை நடத்த உள்ளது.
  இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கடந்த எட்டு வருடங்களாக மாணவர்களுக்கு திறனறித் தேர்வுகளை நடத்தி, அவர்களை அறிவியல் பாடப்பிரிவில் சிறந்தவர்களாக உருவாக்கி வருகிறது.
  இதன் தொடர்ச்சியாக 9-ஆம் ஆண்டாக இவ்வருடம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6,7,8-ஆவது வகுப்புகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்காக அறிவியல் திறனறித் தேர்வை நவம்பர் 13-ஆம் தேதி நடத்த உள்ளது.
  அறிவியல் ஒளி இதழ் நிறுவனத்தினருடன் இணைந்து நடத்தப்படும் இத் தேர்வு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட உள்ளது. தேர்வில் தேர்ச்சி நிலை, சிறப்பு நிலை எய்தும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளை தமிழ்நாடு அறிவியல் மையம் வழங்க உள்ளது.  இந்த தேர்வுகளில் பங்கேற்பதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் திறன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  கடந்த ஆண்டுகளில் இத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு அதிகரித்த கல்வி நிலையுடன் இத்தேர்வை அணுகுவதன் மூலம், அவர்கள் கூடுதலாக அறிவியல் செய்முறை திறன்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.   
  சென்னை, திருச்சி, வேலூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் தேர்வு மையங்களாக செயல்படும். மேலும் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களது பள்ளி வளாகங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
  மேலும் தகவல்களைப் பெற பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சென்னை, திருச்சி, வேலூர், கோயம்புத்தூர் நகரங்களில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai