சுடச்சுட

  

  கணியம்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By DIN  |   Published on : 16th October 2016 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுவோரின் ஆதார் அடையாள அட்டைகளை கணினியில் இணைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார்.
  தொடர்ந்து 2014-15, 2015-16ஆம் நிதியாண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமை வீடுகளை விரைந்து கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  கணியம்பாடி ஊராட்சிக்குள்பட்ட புதூர் ஏரியில் ரூ.17.55 லட்சம் மதிப்பில் நடைபெறும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெரியசாமி, செயற் பொறியாளர் செந்தில்குமார், கணியம்பாடி ஒன்றிய குழுத் தலைவர் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஞ்சலி, ரகுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai