சுடச்சுட

    

    கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியில் தீபாவளி பட்டாசு விற்பனைத் தொடக்கம்

    By DIN  |   Published on : 16th October 2016 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியில் தீபாவளி பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமைதொடங்கி வைத்தார்.
    விழாவுக்கு தலைமை வகித்து விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறியது:
    தீபாவளி பட்டாசு பரிசுப் பெட்டிகள் ரூ.407 முதல் ரூ.1,767 வரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பேன்ஸி ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டில் ரூ.86 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.1.25 கோடிக்கு பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூரில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடிக் கிளைகளில் பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    நிகழ்ச்சியில், மண்டல இணைப் பதிவாளர் எஸ்.திருகுணஐயப்பதுரை, பண்டகசாலை இணை பதிவாளர் த.காமாட்சி, தலைவர் த.ராஜா, துணைத் தலைவர் சி.கே.மணி, பண்டகசாலை செயலாளர் (பொறுப்பு) க.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai