Enable Javscript for better performance
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 59 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 59 பேர் கைது

    By DIN  |   Published on : 16th October 2016 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்காட்டில் சனிக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக இந்து முன்னணியினர் 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கப்படுவதைத் தொடர்ந்து, அவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆற்காடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்து போராட்டம் நடத்த தடை விதித்தனர்.
    இந்நிலையில் சனிக்கிழமை மாலை ஆற்காடு பேருந்து நிலையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் , வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ், ஆற்காடு நகரத் தலைவர் இளங்கோ உள்ளிட்ட 59 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    பின்னர் இரவு 7 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையொட்டி நகரில் பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai