Enable Javscript for better performance
நாளை கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறு அம்ச கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டம் அம்முண்டியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
    இது குறித்து வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கண்ணைய்ய நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
    வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், கரும்பு விவசாயிகள் கோரிக்கைகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (அக்டோபர் 17) காலை 10 மணிக்கு அம்முண்டி சர்க்கரை ஆலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தங்க முருகன் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    இதில், ஒரு டன் கரும்பின் ஆதார விலை ரூ.3,500 என நிர்ணயித்து நிலுவைத் தொகை ரூ.7 கோடியை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே, இக்கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai