Enable Javscript for better performance
பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நகர, ஒன்றிய இந்து முன்னணி அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக அந்த அமைப்பின் குடியாத்தம் நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
    குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட சாமியார் மலை, சிங்கார வேலன் நகர் அருகே குடியாத்தம் - ராமாலை இடையே செல்லும் காந்தி கணவாய் சாலை சரிந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
    இச்சாலை வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர். சிற்றுந்து ஒன்றும் இச்சாலையில் இயக்கப்படுகிறது. சாலை பழுதானதால் இரவில் இவ்வழியாகச் செல்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai