சுடச்சுட

  

  அரக்கோணம் அருகே பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி சாலையோர கிணற்றில் விழுந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
  பரமேஸ்வர மங்கலத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (55), விவசாயி. இவர் சனிக்கிழமை ஆட்டுபாக்கத்தில் உறவினர் இறந்த துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றார். வழியில் மஞ்சம்பாடி அருகே வாகனம் நிலை தடுமாறியதில் தேவராஜ், பைக்குடன் சாலையோரக் கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
  தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் தேவராஜின் சடலத்தையும், பைக்கையும் மீட்டனர்.
  இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai