சுடச்சுட

    

    மகிழ்ச்சியாக வாழ கற்ற கல்வியை சரியாகப் பயன்படுத்த வேண்டும்: பல்கலை. பதிவாளர்

    By DIN  |   Published on : 16th October 2016 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ, கற்ற கல்வியை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பி.அசோகன் பேசினார்.
    வேலூர் ஊரீசுக் கல்லூரியில் 32-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பி.அசோகன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் 930 பேருக்கு பட்டங்களை வழங்கி மேலும் பேசியதாவது:
    வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் அது பூந்தோட்டமாகவும், மறைந்து போனால் போராட்டமாகவும் ஆகி விடும்.
    பொருள் தேடுவது ஒன்று தான் இந்த பிறவியின் நோக்கம் என எல்லோரும் கருதுகிறோம். அப்படி பொருள் சேர்த்து வைத்திருப்பவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை.
    கற்கும் கல்வியானது புத்திசாலித்தனமாக சிந்திப்பதற்கும், சுயநலமற்றவர்களாக இருக்க உதவ வேண்டும். நமது நாட்டில் அனைத்து வளங்களும் இருந்தும் முறையாக, முழுமையாகப் பயன்படுத்துவது இல்லை. நம்மில் பலர் கற்ற கல்வியை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ கற்ற கல்வியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ள திறமையை கண்டறிந்து மேம்படுத்திக் கொண்டால் சாதனையாளர்களாக முடியும் என்றார் அவர்.
    விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.எழில் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார். நிதியாளுநர் ஐ.ஸ்டான்லி ஜோசப் கருணாகரன் வரவேற்றார்.
    கல்லூரி துணை முதல்வர்கள் எம்.ஜெயசெல்வதாஸ், இ.ஆர்.எஸ்.குமார், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai