சுடச்சுட

  

  ஆசிரியர் பணியின்போது மாணவர்களை அன்பால் அரவணைக்க வேண்டும் என சென்னை ராணிமேரி கல்லூரி பேராசிரியை பத்மினி பேசினார்.
  அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா கல்வியியல் கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பட்டங்களை சென்னை, ராணிமேரி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியைகள் எஸ்.கலைமகள், பி.பத்மினி ஆகியோர் வழங்கினர்.
  விழாவில் பேராசிரியை பி.பத்மினி பேசியதாவது:
  ஆசிரிய கல்வியில் பட்டம் பெறும் உங்களிடம் தற்போது அளிக்கப்படுவது பட்டம் என நினைத்து விடாதீர்கள்.
  அதன் பெயர் பட்டமன்று. உளி என நினைத்துக் கொள்ளுங்கள்.
  நீங்கள் அழகான பூக்களை செதுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் உளியால் செதுக்காமல், சிதைக்க காரணமாய் இருந்து விடாதீர்கள், பணியின்போது பேரன்பு, பேருழைப்பு, பேராசை இவை மூன்றும் மிகவும் முக்கியம். மாணவர்களை அன்பால் அரவணைக்க முயலுங்கள்.
  இதில் பேரன்பு முக்கியம். ஒரு மணி நேர வகுப்பு எடுக்க நான்கு மணி நேரம் வாசித்தல் அவசியம். எனவே பேருழைப்பு முக்கியம். சமூகத்தில் மேலாண்மை திறன் படைத்த மாணவர்களை உருவாக்க ஆசை கொள்ள வேண்டும்.
  எனவே பேராசையும் முக்கியம். முக்கியமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ மாணவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்றார். 113 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுக்கொண்ட இவ்விழாவுக்கு விவேகானந்தா வித்யாலயா கல்விக் குழுமத் தலைவர் ஏ.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
  சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் பேராசிரியர் கலைநேசன், விவேகானந்தா கல்விக்குழுமச் செயலர் எஸ்.செந்தில்குமார், ஆலோசகர் எல்.ராஜன், கல்லூரி முதல்வர் பி.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai