சுடச்சுட

  

  2-வது மனைவியை எரித்து கொல்ல முயற்சி: தலைமைக் காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 16th October 2016 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜோலார்பேட்டை அருகே இரண்டாவது மனைவியை எரித்துக் கொலை செய்ய முயன்றதாக தலைமை காவலர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (45). இவர் திருப்பத்தூர் கிராமியக் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
  இவருக்கு கடந்த 20 ஆண்டு
  களுக்கு முன் திருமணமாகி ஜெயலட்சுமி(40) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் ரவிசந்திரன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அக்ரகாரம் கிராமத்தைச் சேர்ந்த அம்சாவை (32) 2-வது திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அம்சாவிற்கு சில ஆண்டுகள் கழித்து ரவிசந்திரன் ஏற்கெனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது.
  இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவிசந்திரன் மற்றும் முதல் மனைவி ஜெயலட்சுமி, மகன் புவனேந்திரன் ஆகியோர் சேர்ந்து அம்சாவை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
  இதுகுறித்து அம்சா அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமை காவலர் ரவிசந்திரன்,
  ஜெயலட்சுமி, புவனேந்திரன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai