சுடச்சுட

    

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கோட்ட அமைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ரமேஷ், பிரசார அணிச் செயலாளர் குமரன், மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் பேசினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகரப் பொருளாளர் ராமு நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai