Enable Javscript for better performance
கத்தியால் குத்தி தொழிலாளி கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே பாதைத் தகராறில் தச்சுத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஆதிசக்தி நகரைச் சேர்ந்தவர் சக்தி (45), தச்சுத் தொழிலாளி. இவருக்கும், இவரது வீட்டின் எதிரே வசிக்கும் கட்டடத் தொழிலாளி ஜெயகுமாருக்கும் (35) பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு இருவருக்கும்  மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயகுமார், கத்தியால் சக்தியை  குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    இந்த கொலைச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான ஜெயகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையான சக்திக்கு திருமணமாகி மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai