சுடச்சுட

    

    ராணிப்பேட்டை ராமானுஜர் அறக்கட்டளை சார்பில்   கலவையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கரிவரதராஜ பெருமாள் கோயிலில்  ஆன்மிக  சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.
    ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆற்காடு தொழிலதிபர் பி.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் கே.வெங்கடேன், செயலாளர் கே.எம்.சிவலிங்கம், ஆலோசகர் ந.சோமசேகரன், பழனி
    குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    லட்சுமிகடாட்சம் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜா.அருணாசலம் சொற்பொழிவாற்றினார். மேலும்  விஷ்ணு அகாதமி கலைக்
    குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
     கலைக்குழுவினர்களுக்கு காட்பாடி வித்யா பீடம் பாரதி முரளிதர சுவாமிகள், தென்னிந்திய புரோகிதர் சங்கப் பொதுச்செயலாளர்  ஆ.செ.நரசிம்மன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
    இதில் கோயில் நிர்வாகிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai