சுடச்சுட

  

  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வேலூர் மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை (அக்டோபர் 17) காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
  இந்தப் போராட்டத்துக்கு திமுக முதன்மைச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறார். கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி, மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.முத்தமிழ் செல்வி, மாநகரச் செயலாளர் ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
  விவசாயிகள் நலன் காக்க நடைபெறும் ரயில் மறியலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் அனைத்து பிரிவினரும் பங்கேற்குமாறு எம்எல்ஏ ஆர்.காந்தி அறிக்கையில் ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai