சுடச்சுட

    

    அரக்கோணம் நகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிதியில் மத்திய கால கடன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் இ.ஜி.வில்சன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் இ.அதியமான் வரவேற்றார். இதில் எம்எல்ஏ சு.ரவி பங்கேற்று சங்க உறுப்பினர்களுக்கு கடன்களை வழங்கினார். இதில் நகர்மன்றத் தலைவர் எஸ்.கண்ணதாசன், நகராட்சி ஆணையர் டி.செளந்தரராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் பதம்நாபன், ஜெர்ரி, சரவணன், பூஷனாதாமு, நகர அதிமுக இளைஞர் அணிச் செயலர் பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai