சுடச்சுட

  

  தீபாவளி பண்டிகை: வேலூரிலிருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

  By DIN  |   Published on : 17th October 2016 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அக்.26 முதல் 28-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வேலூரில் இருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
  இதுகுறித்து கேட்டதற்கு, அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டல அதிகாரி கூறியதாவது:
  தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கு அதிகளவில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் அவர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் மூன்று நாள்களுக்கு வேலூரில் இருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  அதன்படி, வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், தருமபுரி, ஓசூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்லாது மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, வாணியம்பாடி, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai