சுடச்சுட

    

    தேசிய பளுதூக்குதல் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 17th October 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பாராட்டு தெரிவித்தார்.
    தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பளுதூக்குதல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பளுதூக்கும் மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர் எஸ்.லோக்சந்த், 85 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும், 56 கிலோ எடை பிரிவில் மாணவர் ஆர்.ஜெய்கரண் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
    அதேபோல, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த அக். 5-ஆம் தேதி வரை தேசிய அளவில் மிக இளையோர், இளையோர்களுக்கான பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் 62 கிலோ எடை பிரிவில் எஸ்.ராமு, 105 கிலோ பிரிவில் ஆர்.கணேஷ், 44 கிலோ பிரிவில் டி.பூங்கொடி, 53 கிலோ பிரிவில் என்.கார்த்திகா, 58 கிலோ பிரிவில் கவிதா, 63 கிலோ பிரிவில் எல்.ரேஷ்மா, 69 கிலோ பிரிவில் எஸ்.சவீதா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
    அதேபோல, 77 கிலோ பிரிவில் வி.அருள்பாண்டியன், 69 கிலோ பிரிவில் என்.அமீர் ஹுசேன், 56 கிலோ பிரிவில் ஜெ.யோகேஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், 69 கிலோ பிரிவில் பிரியதர்ஷினி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
    போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ், பயிற்சியாளர்கள் விநாயகமூர்த்தி, ஆர்.கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai