சுடச்சுட

  

  ஆரோக்கியமான வாழ்வுக்கான யோகா கல்வி பயிற்சிப் பட்டறை ஆம்பூர் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

  மத்திய அரசின் பண்பாட்டு கலாசார அமைச்சகம், வித்யா பாரதி ஸமஸ்கிருதி சிக்ஷா சமஸ்தான் சார்பாக நடந்த பயிற்சி பட்டறையை பள்ளியின் தாளாளர் எம்.தீனதயாளன் குத்து
  விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜி.நாகராஜன் வரவேற்றார்.   வித்யாபாரதியின் அகில பாரத யோகா கல்வி ஒருங்கிணைப்பாளர் ஸ்தாணுமூர்த்தி, யோகா கல்வியின் அவசியம் குறித்து பேசினார். இந்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறையில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
  மாலையில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு வித்யா பாரதியின் கோட்டத் தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், கோட்டச் செயலாளர் சிவசங்கரன், மாவட்ட தலைவர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று யோகா பயிற்சி முடித்த மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்களை வழங்கினார்கள்.   துணை முதல்வர் டி.ஆர்.நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் சக்கரபாணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai