சுடச்சுட

    

    பைக்கிலிருந்து விழுந்தவர்கள் மீது கார் ஏறியதில் குழந்தை சாவு

    By DIN  |   Published on : 17th October 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர்கள் மீது கார் ஏறியதில் 10 மாத பெண் குழந்தை இறந்தது. மேலும், 6 பேர் பலத்த காய
    மடைந்தனர்.
    வாணியம்பாடியை அடுத்த வீரானமலை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30). ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நதியா (25). இத்தம்பதிக்கு 5 வயதில் காவ்யா, நர்மதா என்ற இரட்டை பெண் குழந்தைகளும், 10 மாதங்களுக்கு முன் மீண்டும் இரட்டை குழந்தைகளாக பிறந்த யாழினி, யோகேஷ்வரன் என4 குழந்தைகள் உள்ளனர்.
    இந்நிலையில், சீனிவாசன் தனது குடும்பத்தினர், உறவினர் மகன் சந்தீப் (15) ஆகியோருடன் திருப்பத்தூரை அடுத்த செலந்தம்பள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றார். பின்னர், சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் 7 பேரும் வீடு திரும்பினர்.  ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா என்ற இடத்தில் வந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு கார் இவர்கள் மீது ஏறி சென்றது.
     இதில், பலத்த காயமடைந்த 7 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் குழந்தை யாழினி இறந்தது. மற்ற 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நதியா அளித்த புகாரின்பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai