சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி  1008 பெண்கள் பால்குட ஊர்வலம்: அமைச்சர் நீலோபர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 17th October 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலமடைய வேண்டி,  வாணியம்பாடியை அடுத்த பூங்குளத்தில் 1008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். இதில் அமைச்சர் நீலோபர் கபீல் கலந்து கொண்டார்.
    பூங்குளம் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து 1008 பெண்கள் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக தேசத்து மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் வேலூர் மண்டலச் செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். மேலும் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் காவடி எடுத்தனர்.
    இந்நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், ஆம்பூர் எம்எல்ஏ பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் கோவி.சம்பத்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் லீலா சுப்பிரமணியம், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கோபால், திருப்பதி, அதிமுக நகரச் செயலாளர் சதாசிவம், ஊராட்சி மன்றத் தலைவர் ருக்குமணி, அதிமுக நிர்வாகிகள் பாண்டியன், ஜெயசக்தி, கே.பி.மணி, தினகரன், ஆர்.நந்தி, ஜெயபாலன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai