சுடச்சுட

  

  அதிமுகவின் 45-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாதனூர் அருகே அகரம்சேரி கிராமத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு அகரம்சேரி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.  எம்ஜிஆர் சிலைக்கு  தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி மாலை அணிவித்தார்.  அகரம்சேரி அதிமுக கிளை நிர்வாகிகள் தணிவேல், ராபர்ட், முரளி, பிரபு, மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
  குடியாத்தத்தில்...
  குடியாத்தம், அக். 17: குடியாத்தம் நகர, ஒன்றிய அதிமுக சார்பில் கட்சியின் 45 ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி கட்சியின் நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எம். பாஸ்கர், கட்சி நிர்வாகிகள் ஆர்.மூர்த்தி, எஸ். சிவகுமார், எஸ்.இமயவரம்பன், இ.டி. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அதிமுகவினர் காந்தி
  நகரில் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
  நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் டி.சிவா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலர் வி.ராமு கட்சிக் கொடியை ஏற்றினார். ஆத்மா திட்ட தலைவர் நாகராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் டி. தேவராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் மில் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ஆற்காட்டில்...
  ஆற்காடு, அக். 17:  ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் கட்சியின் 45-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,  ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு ஆற்காடு  ஒன்றியச் செயலாளர் தாஜ்புரா எம்.குட்டி தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் எஸ்.சிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.அன்பழகன், ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஏ.அரங்கநாதன்,  எஸ்.ஆர்.சங்கர், என்.சாரதி வேப்பூர் மணி, ஜி.சின்னக்கண்ணு, முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் சாத்தூர்பாபு, சி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai