Enable Javscript for better performance
ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 25 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 25 பேர் கைது

    By DIN  |   Published on : 18th October 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 25 பேரை வேப்பங்குப்பம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் அப்பாசமி தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  
    அப்போது அவ்வழியாக வந்த 3 ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனர்.  ஆட்டோவில் மலைக் கிராமங்களான தேந்தூர், பாலாம்பட்டு, கத்தியாப்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் பயணம் செய்துள்ளனர்.  அவர்கள் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை வைத்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
    மேலும் தீவிர விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டச் செல்வது தெரியவந்தது.  இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai