சுடச்சுட

    

    உரிமம் பெறாமல் பட்டாசு மொத்த விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

    By DIN  |   Published on : 18th October 2016 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணத்தில் பட்டாசு மொத்த விற்பனையை, உரிமம் பெறாமலேயே சிலர் தொடங்கியுள்ளனர்.
        இதனைக் கட்டுப்படுத்த அரசுத் துறை அலுவலர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  
     அரக்கோணத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தாற்காலிகப் பட்டாசு உரிமங்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு, நிரந்தர பட்டாசு விற்பனை உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
    இந்த உரிமங்களும், வணிகப் பகுதியில் கடை வளாகத்தில் இருவாயில்கள் உள்ளனவா என்பது போன்ற நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு கோட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்த பிறகே உரிமங்கள் மிகுந்த கண்காணிப்புக்கு பின் வழங்கப்படுகின்றன.
    இந்த உரிமத்தை பெற்ற பிறகு தீயணைப்பு துறையிடம் சான்று பெற்று பட்டாசு வணிகத்தைத் தொடங்க வேண்டும். தற்போது வணிக வரித்துறையிடமும் சான்றிதழ் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
    இந்நிலையில் அரக்கோணத்தில் மொத்த விற்பனை என்ற பெயரில் பலர் பட்டாசு வணிகத்தை உரிமம் பெறாமலேயே தொடங்கியுள்ளனர். நகரக் காவல் நிலையம் அமைந்துள்ள ஹூப்ளி சாலையில் உள்ள கடைகளில் பட்டாசுகள் மொத்த விலைக்கு விற்கப்படுகின்றன.
    இதற்காக ஒவ்வொரு வணிகரும், ஒரு டன்னுக்கு மேல் பட்டாசுகளை வாங்கி இருப்பு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    மக்கள் நடமாட்டம்  அதிகமுள்ள இத்தெருவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும்.
    இந்த மொத்த விற்பனை வணிகர்களில் ஒரு நபர் மட்டுமே முறைப்படி உரிமம் பெற்றுள்ளதாக வருவாய்த் துறையினர்
    தெரிவித்தனர்.
    இந்நிலையில் மேலும் நான்கு கடைகளில் மொத்த விற்பனை என்ற பெயரில் பட்டாசுகள் விற்கப்படு
    கின்றன.
    மேலும் அரக்கோணத்தில் பலர் பட்டாசு பண்டு என்ற பெயரில் மாதாமாதம் பணம் வசூலித்து தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் பட்டாசுகளை அளித்து வருகின்றனர்.
    சுமார் 500 பேருக்கு மேல் உறுப்பினர்களை சேர்த்துள்ள இவர்கள் இந்த 500 பேருக்கும் கொடுக்க பட்டாசுகளை உரிமம் பெறாமல் எடுத்து வந்து பாதுகாப்பற்ற நிலையில் வீடுகளில் வைத்து விநியோகம் செய்வதாகத் தெரிகிறது. இந்த பட்டாசுகள் இருக்கும் வீடுகளில் விபத்துகள் ஏற்பட்டால் அருகில் உள்ள வசிப்பிடங்களும் பாதிக்கப்பட்டு உயிர்ச் சேதத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது.
    எனவே மாவட்ட வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் இப்பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai