சுடச்சுட

  

  உருது மொழிப் பாடத்தில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

  By DIN  |   Published on : 18th October 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உருதுமொழிப் பாடத்தில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  இதில், பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, கடனுதவி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 428 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
  தொடர்ந்து, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உருதுமொழிப் பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறுபான்மையின  மாணவ, மாணவிகள் 14 பேருக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கான காசோலை, 3 பயனாளிகளுக்கு ரூ.76 ஆயிரத்து 800 மதிப்பில் நவீன செயற்கை உபகரணங்கள், பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.27 லட்சத்து 15 ஆயிரத்திற்கான காசோலை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெரியசாமி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai