Enable Javscript for better performance
எளிமையாகவும், மன வலிமையுடனும் வாழ்ந்தவர் அப்துல்கலாம்: திருவள்ளுவர் பல்கலை. துணைவேந்தர்- Dinamani

சுடச்சுட

    

    எளிமையாகவும், மன வலிமையுடனும் வாழ்ந்தவர் அப்துல்கலாம்: திருவள்ளுவர் பல்கலை. துணைவேந்தர்

    By DIN  |   Published on : 18th October 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தோற்றத்தில் எளிமையாகவும், மன வலிமையில் உறுதியாகவும் வாழ்ந்து காட்டியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் என திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் பேசினார்.
    சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலை. நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாள் விழாவாக பல்கலை. வளாகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
    நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.செந்தில்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் பி.அசோகன் விழாவை தொடங்கிவைத்து பேசினார்.
    இதில், துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்து பேசியதாவது :
    அப்துல் கலாம் தோற்றத்தில் எளிமையாகவும், மன வலிமையில் உறுதியாகவும் இருந்து வாழ்ந்து காட்டியவர். அவர் இந்திய துணைக் கண்டத்தின் உயரிய பதவியான குடியரசுத் தலைவராக இருந்தபோது, தனது அண்ணன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தன்னுடன் தங்கிய நாள்களுக்கான செலவுத்தொகையை தன்னுடைய ஊதியத்தில் இருந்து வழங்கினார். கலாம், இளைஞர்கள், குழந்தைகளுடன் அதிக நேரம் உரையாடிய சிறந்த பேராசிரியர். கடந்த 2003 ஆம் ஆண்டு, பாரதியார் பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலாம் பேசினார். அப்போது, "வேப்ப மரத்தில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க முடிந்ததை போல், புங்க மரத்தை பயனுள்ளதாக ஏன் பயன்படுத்தக்
    கூடாது' என கேள்வி எழுப்பினார். அவரது பேச்சு எனக்கு ஆராய்ச்சியை தூண்டியது. எனவே, அப்துல் கலாமின் அறிவுரைகளை பின்பற்றி மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றார்.  
    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக புல முதல்வர் பெருவழுதி வாழ்த்தி பேசினார். நாட்டு நலப்
    பணித் திட்ட அலுவலர் பி.சென்னகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவில், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai