சுடச்சுட

    

    காட்பாடியில் ரயில் மறியல்: எம்எல்ஏக்கள் உள்பட 700 திமுகவினர் கைது

    By DIN  |   Published on : 18th October 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காட்பாடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக எம்எல்ஏக்கள் உள்பட 700 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாக திமுக அறிவித்திருந்தது.
    இதற்கு அனுமதி மறுத்து, காட்பாடி ரயில் நிலையத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.காந்தி, ப.கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், ஈஸ்வரப்பன் மற்றும் திரளான திமுகவினர் தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் சென்றனர்.
    அங்கு வந்த பெங்களூரு விரைவு ரயிலை மறித்த திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 700 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai