Enable Javscript for better performance
நோயாளிகள் பயன்பாட்டுக்கான மருத்துவ பயிற்சி உபகரணங்கள்- Dinamani

சுடச்சுட

    

    நோயாளிகள் பயன்பாட்டுக்கான மருத்துவ பயிற்சி உபகரணங்கள்

    By DIN  |   Published on : 18th October 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டுக்காக ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
    யோகா, இயற்கை மருத்துவம் சார்பில் அமைக்கப்பட்ட உபகரணங்களை தொடங்கி வைத்தபின், மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவம் கூறியதாவது:
    நவீன விஞ்ஞானம் வளர்ந்து விட்ட போதிலும் இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் யோகா, இயற்கை மருத்துவத்தில் நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்த வழிகள் இருக்கின்றன.
    அந்த வகையில் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உபகரணங்களை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடை குறைவு, தசைகளை வலுப்படுத்துதல், கொழுப்பு குறைத்தல், மன அழுத்தம் சீராக்குதல், குதிக்கால் வலி, கை, கால், மூட்டு வலி நீக்குதல் உள்பட பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்.
    இப்பிரிவு தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்படும் என்றார்.
    நிகழ்ச்சியில், யோகா, இயற்கை மருத்துவத் துறை தலைவர் ஆர்.சஞ்சய் காந்தி, மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சவுந்திரபாண்டியன், துணை முதல்வர் எம்.பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai