சுடச்சுட

    

    ஆற்காடு அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.
    ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, தொழிலாளி. இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு லோகேஷ் (4), நிரஞ்ஜானாஸ்ரீ(1) ஆகிய இரு குழந்தைகள்.
    இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வேப்பூர் தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகன் லோகேஷை வேனில் இருந்து அழைத்து வர தனது  வீட்டின் எதிரே  சத்தியா நின்றார். கைக் குழந்தை நிரஞ்ஜானாஸ்ரீ கீழே விட்டுவிட்டு  லோகேஷையை வேனில் இருந்து இறக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக  குழந்தை நிரஞ்ஜானாஸ்ரீ  வேனின் முன்சக்கரம் முன் சென்றுள்ளது. ஓட்டுநரான  வேப்பூரைச் சேர்ந்த தியாகராஜன் (28) வேனை எடுத்துள்ளார். இதில்  வேன் சக்கரத்தில் சிக்கிய நிரஞ்ஜானாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.
    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர  போலீஸார் வழக்குப் பதிவு செய்து  பள்ளி வேனை பறிமுதல் செய்தனர். வேன்  ஓட்டுநர்  தியாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai