Enable Javscript for better performance
பாலாற்றுக் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடியில் பாலாற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை
    யினர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
    வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே பாலாற்றின் கரை ஓரமாக பல ஆண்டுகாலமாக குடிசை போட்டும், செங்கல் சூளைகளையும் சிலர் அமைத்து ஆக்கிரமித்தும் செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதயேந்திரம் பேரூராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் வாணியம்பாடி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் அருள்மொழிவர்மன் மற்றும் வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு குடிசைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளைகளில் செங்கல் அடுப்பு பற்ற வைத்திருந்ததால் ஒரு வாரம் அவகாசம் அளித்தனர்.
    மேலும் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai