Enable Javscript for better performance
மாவட்ட விளையாட்டுப் போட்டி: வாணியம்பாடி பள்ளி மாணவர்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட விளையாட்டுப் போட்டி: வாணியம்பாடி பள்ளி மாணவர்கள் சாதனை

    By DIN  |   Published on : 18th October 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆண்கள்  மற்றும் பெண்கள் இறகு பந்து, மேஜை பந்து போட்டிகளில் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
    வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 17 வயதுக்கு உள்பட்ட ஒற்றையர் பிரிவில் அல்பியா சதாத், இரட்டையர் பிரிவில் அல்பியா சதாத், எழில், 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவிகள் பூஜாலட்சுமி, சிந்துஜா மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவர்கள் முகமது அக்ரம் ஜைத், தல்ஹா பிராஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    மேலும் மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டியில் 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் பிரியதர்ஷினி, சவுமியா ஆகியோர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்றி மாணவர்கள் மண்டல அளவில் திருவண்ணாமலையில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர் பிங்கி ரூஹித், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai