சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டி வேலூரில் அதிமுகவினர் பால்குட ஊர்வலம்: அமைச்சர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 18th October 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி வேலூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பால்குடத்துடன் ஊர்வலமாகச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ
    மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர்  ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாநில அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபீல் ஆகியோர் தலைமையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் தலையில் பால் குடத்துடன் ஊர்வலமாக கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.
    இதில் சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி பத்மநாபன், மேயர் பா.கார்த்தியாயினி, முன்னாள் எம்எல்ஏக்கள் வி.எஸ்.விஜய், ம.கலையரசு, சி.ஞானசேகரன், மாநகரப் பொருளாளர் ப.நீலகண்டன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சீனிவாசகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அகரம்சேரியில் கோ பூஜை
    ஆம்பூர், அக். 17:  மாதனூரை அடுத்த அகரம்சேரி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் ஜெயலலிதா நலம்பெற வேண்டி ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
    ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி தலைமை வகித்து கோ பூஜையை தொடங்கிவைத்தார்.  
    ஒன்றிய அதிமுக செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் அன்பரசன், மாதனூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் மஞ்சுளா, வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் ஆனந்த்பாபு உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் தொகுதி செயலாளர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன் செய்திருந்தார்.
    குடியாத்தத்தில்...
    குடியாத்தம், அக். 17: குடியாத்தம் ஒன்றிய அதிமுக சார்பில் மேல்ஆலத்தூரில் உள்ள தென்னிந்திய திருச்சபையில் திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் சி.சிவா தலைமை வகித்தார். எம்எல்ஏ ஜி.லோகநாதன் தொடக்கி வைத்தார். முன்னாள் அதிமுக மாவட்டச் செயலர் வி.ராமு, ஆத்மா திட்ட தலைவர் நாகராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கொட்டமிட்டா எம்.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai