Enable Javscript for better performance
முறையான இடஒதுக்கீடு அளித்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல்: ஜி.கே.மணி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முறையான இடஒதுக்கீடு அளித்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல்: ஜி.கே.மணி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th October 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முறையான இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
    வேலூரில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பதுடன், விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
    நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தமிழர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
    சமூக நீதிக்கு எதிராக இருப்பதால் முறையாக இடஒதுக்கீடு செய்த பின்னரே, உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள வழக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அதுதொடர்பான ஆதாரங்களை பாமக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.
    புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்றார். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் கே.எல்.இளவழகன், எம்.கே.முரளி, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai