சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலத்த காய
    மடைந்தனர்.
    வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் (28). இவரது நண்பர்கள் யஸ்வான் (32), ரபீக்  (24). இவர்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு லாரியில் பர்கூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.  நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே வந்தபோது முன்பக்க டயர் பழுதடைந்து லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் சம்பவ இடம் சென்று விபத்தில் காயமடைந்த பஷீர், யஸ்வான், ரபீக் ஆகிய 3 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai