சுடச்சுட

    

    விஐடியில் தொழில் முனைவோர் பயிற்சி: அக். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 18th October 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் விஐடி பல்கலை.யில் தொழில் முனைவோராக்க நான்கு வாரம் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் வேலூர் விஐடியில் இயங்கி வரும் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொறியியல், அறிவியல், வணிகம், கலை பட்டதாரிகள், பட்டயச் சான்று பெற்றவர்களை தொழில் முனைவோராக்கும் வகையில் ஆராய்ச்சிகளுடன் கூடிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
     புதிய உற்பத்தி தொடங்குவதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி, உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சந்தை வசதி உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கானப் பயிற்சி சிறந்த வல்லுநர்கள், பேராசிரியர்களால் அளிக்கப்படுகிறது.
    அதன்படி, பட்டம், பட்டயச் சான்று பெற்றவர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான நான்கு வார காலப் பயிற்சி முகாம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி தொடங்குகிறது.
    இதில் சேர விரும்புவோர் VI​T​T​B என்ற பெயரில் ரூ.1,000-க்கு வங்கி வரைவோலை எடுத்து வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 94433-11367, 0416-2202303 ஆகிய எண்கள் அல்லது tb‌i​c‌o‌o‌r‌d‌i‌n​a‌t‌o‌r​@‌v‌i‌t.ac.‌i‌n​  என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai