சுடச்சுட

    

    அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க பொதுமக்களிடையே தினமும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இடைத்தரகர்கள் மூலம் சென்றால் மட்டுமே உடனடியாக புகைப்படம் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை
    களுக்கு தற்போது ஆதார் அட்டை முக்கியம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் குடும்ப அட்டை வைத்திருந்தும், ஆதார் அட்டை இல்லாதவர்கள் தற்போது அவசரமாக ஆதார் அட்டை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
    அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க குறைந்தது 300 பேருக்கு மேல் தினமும் வருகின்றனர். இதில் காலையில் அலுவலகம் திறந்தவுடன் குறிப்பாக ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் அலுவலர் வருவதற்கு முன்பே அந்த அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து இருப்போருக்கு டோக்கன் கொடுக்கப்படுகிறது. சுமார் 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
    டோக்கன் கொடுத்த பிறகு வருபவர்கள் முதியவராக,  மாற்றுத்திறனாளியாக, கைக்
    குழந்தையுடன் இருப்பவராக, கர்ப்பிணியாக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் காலையில் டோக்கன் வாங்காதவர்கள், இடைத்தரகர்கள் மூலம் உள்ளே சென்றால் அவர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது.
    இதற்காக இடைத்தரகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த இடைத்தரகர்கள் அந்த அலுவலகத்தின் உள்ளே இருக்கும் அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் அனுமதியுடன் செயல்படுவதால் நேரிடையாக உள்ளே செல்கின்றனர். பலர் காத்திருக்க,  சிலர் உள்ளே செல்லும் நிலை உருவாவதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. கைக்குழந்தையுடன் பெண்கள் தவறி கீழே விழும் நிலையும் உருவாகிறது.
    தற்போது ஆதார் அட்டை கோரி வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ஆதார் புகைப்படக் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போது ஒரு ஊழியர் மட்டுமே புகைப்படம் எடுக்கும் பணியில் இருப்பதால் ஒருவருக்கு குறைந்தது 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவர் பணிபுரியும் எட்டுமணி நேரத்தில் 24 பேருக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கிறார்.
    எனவே புகைப்பட கருவிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும். மேலும் அந்த அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட காரணமான இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    குறிப்பாக அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் அலுவலகத்தின் காத்திருப்போர் பகுதியில் பழைய நாற்காலிகள், உடைந்த நாற்காலிகள் போட்டு அந்த இடத்தை கிடங்கு போல் வைத்திருப்பதை தவிர்த்து சுத்தப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள்
    எதிர்பார்க்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai