சுடச்சுட

    

    ஆற்காடு அருகே அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
     ஆற்காடு, பாலாற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர்  தணிகாசலம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். இறந்தவரின் சட்டை பையில் இருந்த அடையாள அட்டையில் ஆர்.செல்வன் (26), கடலூர் மெயின் ரோடு, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் என்று முகவரி இருந்தது. இதையடுத்து அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இளைஞரை யாராவது கொலை செய்து பாலாற்றில் வீசிச் சென்றனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai