சுடச்சுட

  

  குடியாத்தம் அருகே மணல் கடத்தலுக்கு உடந்தையாக, உதவி ஆய்வாளரை மிரட்டியதாக போலீஸ்காரர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
  குடியாத்தம், நெல்லூர்பேட்டை அருகே கௌன்டன்யா ஆற்றில் மணல் கடத்துவதைத் தடுக்க அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
  மணல் கடத்தலைத் தடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புத்தர் நகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் பிரவீண்ராஜ் (23) கௌன்டன்யா ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற நகர காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் மாட்டு வண்டியை நிறுத்தி விசாரணை நடத்தினார்.
  அப்போது பிரவீண்ராஜ், செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, வீட்டிலிருந்த வேலூர் ஆயுதப் படைப் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரியும் அவரது உறவினர் அருமைக்கரசனை (35) அங்கு வரவழைத்துள்ளார்.
  அங்கு வந்த அருமைக்கரசன், உதவி ஆய்வாளர் சீனிவாசனை தகாத வார்த்தையில் பேசி, அவரை மிரட்டி விட்டு, மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
  இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸார் வழக்குப் பதிந்து  
  பிரவீண்ராஜை கைது செய்தனர். அருமைக்கரசன் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai