சுடச்சுட

    

    வேலூர் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டுள்ள கடைகள் சிறு பழ வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படாவிடில் வியாழக்கிழமை (அக். 20) முதல் தரைக்கடை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
     வேலூரில் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர், அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேலு, அண்ணா சிறு பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.அழகர் ஆகியோர் கூறியதாவது:
     லாங்கு பஜாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி மூலம் 256 கடைகள் கட்டப்பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சிறு பழ வியாபாரிகள் 155 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் புதன்கிழமைக்குள் (அக்.19) கடைகள் ஒதுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்.  சிறு பழ வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படாவிடில் வியாழக்கிழமை முதல் லாங்கு பஜாரில் தரைக்கடை அமைப்பது, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai