Enable Javscript for better performance
கள விளம்பரத் துறை சார்பில் இன்று விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கள விளம்பரத் துறை சார்பில் இன்று விழிப்புணர்வு முகாம்

    By DIN  |   Published on : 19th October 2016 11:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் கள விளம்பரத் துறை சார்பில் தாய்சேய் நலம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் குறித்த விழிப்புணர்வு முகாம் பேர்ணாம்பட்டு அருகே ஏரிக்குத்தி மற்றும் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
     தாய் சேய் நலம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஏரிக்குத்தி கிராமத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. வளர் இளம்பருவத்தினர் குறித்த விழிப்புணர்வு முகாம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.   திருப்பத்தூர் தாய்சேய் நல அலுவலர் சு.பியுலா ஏஞ்சலின், வட்டார மருத்துவ அலுவலர்
    கோ.குமார், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். மேலும் இலவச மருத்துவ முகாமும் அங்கு நடைபெற உள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai