சுடச்சுட

  

  காந்தி சாலை சீரமைப்பு கோரி விரைவில் போராட்டம்: வணிகர்கள் அறிவிப்பு

  By DIN  |   Published on : 19th October 2016 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் பகுதியின் முக்கிய சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக அரக்கோணம் பகுதி வணிகர்கள்  அறிவித்துள்ளனர்.
  அரக்கோணத்தின் முக்கியச் சாலையான காந்தி சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறை மற்றும் பராமரிக்காத அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து விரைவில் அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும் என இச்சங்க நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
  இதுகுறித்து அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆ.கஜேந்திரன், செயலாளர் ஜிடிஎன்.அசோகன், பொருளாளர் ஏஆர்.குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
   அரக்கோணம் நகரின் முக்கியச் சாலை யான காந்தி ரோடு, எஸ்.ஆர்.கேட் பகுதியில் இருந்து கிருபில்ஸ்பேட்டை, பழனிபேட்டை, பஜார், பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை, ஜோதிநகர் வரை இச்சாலை சுமார் 4 கி.மீ. நீளமான சாலையாகும். நகரின் முக்கிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு மருத்துவமனை, பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை இச்சாலையிலேயே உள்ளன. இச்சாலையில் கடந்த ஒரு மாதமாக புதைச் சாக்கடை திட்டத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பள்ளங்கள் மூடப்பட்டு விட்டன. எனினும் சாலையின் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. இச்சாலை தற்போது மண் சாலையாக மாறிவிட்டதால், அதிக அளவில் தூசு பறக்கிறது. இதன் காரணமாக சாலையில் கனரக வாகனங்களுக்குப் பின் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
  தூசு அதிகரிப்பதால், இச்சாலையில் கடைகள் வைத்திருப்போர் கடைகளில் அமர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
  இதுகுறித்து அதே சாலையில் செல்லும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளோ, அரக்கோணம் நகராட்சி அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை. இதனைக் கண்டித்து அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், நகரில் உள்ள அனைத்து வணிக சங்கத்தினரையும் இணைத்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai