சுடச்சுட

    

    சதவீதம் போனஸ் தொகையை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்கக் கோரி சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கிவரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 350-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து
    வருகின்றனர்.
    இவர்களுக்கு கடந்த 2007 முதல் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2014-15-ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.  மேலும் தற்போது 2015-16-ஆம் ஆண்டுக்கு 10 சதவீதம் போனஸ் தொகை வழங்க சர்க்கரை ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.  
    இதனைடுத்து அனைத்து தொழிற் சங்கங்களின் பேரவை சார்பில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலகம் முன் கூடி 20 சதவீதம் போனஸ் தொகையை, நிலுவைத் தொகையுடன் உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மேலும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai