சுடச்சுட

  

  சோளிங்கர் கோயில் தக்கான் குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 19th October 2016 02:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  solingur

  சோளிங்கர் கோயில் தக்கான் குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும் என மாநில பிராமணர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில  பொதுக்குழுக் கூட்டம் சோளிங்கரில் அண்மையில் நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் என்.நாராயணன் தலைமை வகித்தார்.

  இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  சோளிங்கர் புனித தலத்தில் தற்போது அடைத்து வைத்துள்ள தக்கான் குளத்தை   பக்தர்கள் புனித நீராட திறந்து விடும்படி அறநிலையத் துறையைக் கேட்டு கொள்வது.

  தமிழக கோயில்களை அரசுத் துறையிலிருந்து விடுத்து சைவ மற்றும் வைணவ தன்னாட்சி வாரியங்களிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில்களின் ஆகம வழிபாடுகள், நிர்வாகம், பராமரிப்பு, அபிவிருத்தி, மற்றும் தூய்மை ஆகியவற்றிற்கு முனைப்பு,மேலாண்மைத் திறன் ஆகியவைகளை அதிகரித்து உருவாக்கிட முன்வருமாறு தமிழக அரசையும், அரசியல் கட்சிகளையும் இப் பொதுக்குழு கோருகிறது,  தமிழில் விஞ்ஞானம், தொழில்நுட்பச் சொற்கள் மற்றும் சொற்றொடர்களை அதிகளவில் அறிமுகப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    

  கூட்டத்தில் நிர்வாகிகள் வி.ஜெகந்நாதன், கே.திருமலை, கே.கே.சி.ராஜாஸ்வாமி, அனுசுயா தேவி, ஸ்ரீனிவாசன், எம்.ஸ்ரீநிவாசன், ஜி.தியாகராஜன், என்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai