Enable Javscript for better performance
தகராறில் கத்திக் குத்து: வியாபாரி காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே நிலத்தகராறில் வியாபாரிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
     திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலிகண்ணன்(45). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகுமாருக்கும் (22) கடந்த மூன்று ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலிகண்ணனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கலிகண்ணன் அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கலிகண்ணன் மாற்றம் செய்யப்பட்டார்.  இதுகுறித்து கலிகண்ணனின் சகோதரி சித்ரா அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான ஹரிகுமாரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai