சுடச்சுட

  

  ஆம்பூர் பகுதியில் நடந்த திருட்டு மற்றும் பள்ளிகொண்டா பகுதியில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  பள்ளிகொண்டா பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (35) ஜாமீனில் வெளியில் வந்த பிறகு தலைமறைவானார்.  அவரை போலீஸார் தேடி வந்தனர்.
  இவர் ஒடுக்கத்தூர் பகுதி கீழ்கொத்தூரைச் சேர்ந்த தனது நண்பர் கமலநாதனுடன் (27) சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. ஆம்பூர், உமர்ஆபாத், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை இருவரும் சேர்ந்து திருடியுள்ளனர்.
  தலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி பிலிப் கென்னடி உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.  தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் ஒசூரில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் ஒசூர் சென்று அவர்களைப் பிடித்து கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai