சுடச்சுட

  

  நிலுவைத்தொகையை வழங்க தாமதித்தால் தொடர் போராட்டம்: கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

  By DIN  |   Published on : 19th October 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.21 கோடியை வழங்க தாமதித்தால், உண்ணாவிரதம், பூட்டுப் போடுவது போன்ற தொடர் போராட்டங்களை நடத்துவது என கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் அம்முண்டி தங்கவேல் முருகன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கண்ணைய்ய நாயுடு தலைமை வகித்தார். செயலாளர் எம்.ரகுபதி முன்னிலை வகித்தார். பொருளாளர் கே.கிஷ்டப்ப நாயுடு வரவேற்றார்.
  இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை ரூ.21 கோடியை ஆலை நிர்வாகம் வழங்க காலதாமதமானால் உண்ணாவிரதப் போராட்டம், பூட்டு போடும் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது, இணை மின் உற்பத்திக்காக கடந்த ஏழு வருடங்களாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 கோடியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இதில் சங்க நிர்வாகிகள் கோபி,சேகர்,ராமச்சந்திரன் மற்றும் கரும்பு உற்பத்தி விவசாயிகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
  பின்னர், சங்கத் தலைவர் கண்ணைய்ய நாயுடு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை ஆலை மேலாண்மை இயக்குநர் ராமசாமியிடம் வழங்கினர்.  அதனை பெற்றுக்கொண்ட ராமசாமி கூறுகையில், "விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவவைத் தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai