சுடச்சுட

  

  வாலாஜாபேட்டை வட்டம், சுமைதாங்கி பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு சுமைதாங்கி ஊராட்சித் தலைவர் டி.ரகுபதி தலைமை வகித்தார். சுமைதாங்கி பால் உற்பத்தியாளர் கூட்டுவு சங்கத் தலைவர் ஆர்.சின்னராஜி வரவேற்றார். சங்கத்தின் செயலாளர் ஜெயராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
   விழாவில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ஜி.பார்த்தீபன் பங்கேற்று 390 உறுப்பினர்களுக்கு ரூ. 5 லட்சத்து 69 ஆயிரத்து 295 தொகையை வழங்கி வாழ்த்தினார்.
   காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய உதவிப் பொது மேலாளர் வே.ராஜ்குமார், துணைப் பதிவாளர் (பால் வளம்) என்.ராமச்சந்திரன், முதுநிலை ஆய்வாளர் கீதா, மாவட்ட முன்னாள் செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, முன்னாள் அமைச்சர் முகமது ஜான், வாலாஜா ஒன்றியக் குழுத் தலைவர் வி.கே.நிர்மலா, மேல் விஷாரம் நகர்மன்ற துணைத் தலைவர் இப்ராஹிம் கலிலுல்லா, ஊராட்சித் தலைவர்கள் தனஞ்செழியன் (திருப்பாற்கடல்), உமாபிரகாஷ் (பூண்டி), செயலாளர்கள் பூங்காவனம் (வாலாஜா ஒன்றியம்), குப்பன் (சோளிங்கர் ஒன்றியம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai