Enable Javscript for better performance
மணல் அள்ளுவதை தடுக்கக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே கௌன்டன்யா ஆற்றில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கௌன்டன்யா ஆற்றில் நெல்லூர்பேட்டை, அருகே நாள்தோறும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் சிலர் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வதாகத் தெரிகிறது.
    இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்
    கூறப்படுகிறது.  
    இந்நிலையில் அங்குள்ள குமரன் நகர், என்.எஸ்.கே. நகர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேர்ணாம்பட்டு சாலையில் நெல்லூர்பேட்டை காந்திசிலை அருகே செவ்வாய்க்
    கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவல் அறிந்ததும் டிஎஸ்பி கே.எம்.சங்கரன், வருவாய்த் துறையினர் அங்கு வந்து அவர்களை சமரசம் செய்தனர்.  
    அப்பகுதி வழியாக மாட்டு வண்டிகள் செல்லாதவாறு, ஆற்றோரம் அகழி வெட்டுவதாக அவர்கள் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai