சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ஜெகதாம்மாள், முன்னாள்  தலைவர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் பாக்கியலட்சுமி வரவேற்றார். முகாமில் 41 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், புதிய ரேஷன் அட்டை ஆகியவற்றை பரமேஸ்வரி வழங்கி அரசின் திட்டங்கள் பற்றி விளக்கிக் கூறினார். இதைத் தொடர்ந்து முகாமில் 76 மனுக்கள் பெறப்பட்டன.
  வாலாஜாபேட்டையில்...
  நெமிலி வட்டம், ஆயர்பாடி, தர்மநீதி, ஓச்சேரி மற்றும் உத்தரம்பட்டு ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனு
  நீதிநாள் முகாம் ஆயர்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு நெமிலி வட்டாட்சியர் கே. இளஞ்செழியன் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இ.ரமேஷ்  வரவேற்றார்.
  முகாமில் 259 மனுக்கள் வரப்பெற்றன. இதில் 235 மனுக்கள் ஏற்கப்பட்டு கல்வி உதவித் தொகை, உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், வாரிசுச் சான்றிதழ், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 24 மனுக்கள் பரிசீலனையில்
  உள்ளன.
  தனித் துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) அ.அப்துல் முனீர் 235பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
  ஊராட்சித் தலைவர்கள் பாலாஜி (ஆயர்பாடி), சரஸ்வதி ராமன் (தர்மநீதி), அரிகிருஷ்ணன் (ஓச்சேரி), சி.பி.முத்து (உத்தரம்பட்டு), மண்டலத் துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் கோபி, ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் வேல்முருகன், விக்னேஷ், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  குடியாத்தத்தில்...
  பேர்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை 64 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  முகாமுக்கு, வேலூர் கோட்டாட்சியர் அஜய்சீனிவாசன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். வட்டாட்சியர் கலைவாணி வரவேற்றார்.
  சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் மகாலிங்கம், மண்டலத் துணை வட்டாட்சியர் ரமாநந்தினி, வருவாய் ஆய்வாளர் பழனி, வேளாண்மை உதவி அலுவலர்கள் ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ஆற்காட்டில்...
  ஆற்காடு ஒன்றியம் மாங்காடு, முப்பதுவெட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் பழைய மாங்காடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
  முகாமுக்கு ஆற்காடு வட்டாட்சியர் சாந்தி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரத்னா, ஆற்காடு ஒன்றியக் குழு துணைத் தலைவர் எஸ்.சிகாமணி, மாங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் 176 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 26 ஆயிரத்து 86 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
  இதில் மண்டலத் துணை வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜசேகர், தேவராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திரா பூபதி, தணிகாசலம் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai