சுடச்சுட

  

  ஆற்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.
   ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரியில் தனியார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ஆம் வகுப்பு வரை 1,668 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை பகல் 1.50 மணிக்கு பள்ளிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது பகல் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதுகுறித்து ரத்தினகிரி போலீஸாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பகல் 2.30 மணியளவில் பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், வேலூர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸார், வெடிகுண்டு தடுப்புக் குழுவினர் பள்ளிக்கு வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.  
   இதையடுத்து பள்ளி வளாகம், விளையாட்டுத் திடல், வகுப்பறைகள், ஆய்வுக் கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.  இதுகுறித்து ரத்தினகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai